×

சட்டம் அமல்படுத்தியப்பின் வழக்கு தொடரலாம்: ஜெ.தீபக் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.!

சென்னை: ஜெ.தீபக்கின் மனுவை அவரச வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெலலிதாவின் வேதா இல்லத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கி அதற்கான இழப்பீடு தொகையையும் செலுத்தி விட்டது. இதனை எதிர்த்து ஜெ.தீபக் தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்குவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான அவரச சட்டத்தையும் அரசு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து, ஜெ.தீபக் தாக்கல் செய்த மனுவில், நடைபெறக்கூடிய இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அந்த அவசர சட்டத்தை அமலாக்க வாய்ப்பிருப்பதாகவும், எனவே அதற்கு முன்பாக அவசர சட்டத்தை எதிர்த்து தாங்கள் மனுதாக்கல் செய்திருக்கிறோம். இதனால் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஜெ.தீபக்கின் வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, அவர்கள் சட்டத்தை அமல்படுத்தட்டும். அதன் பின்பாக அதனை எதிர்த்து நீங்கள் வழக்கு தொடரலாம். அதற்கு முன்பாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Chennai High Court ,J Deepak , Chennai High Court refuses to hear J Deepak's petition as a matter of urgency.
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...