×

குளித்தலை பகுதியில் 6 மாதமாக செயல்படாமல் உள்ள வாரச்சந்தைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

குளித்தலை: கொரோனோ பாதிப்பால் குளித்தலை பகுதியில் ஆறு மாத காலமாக செயல்படாமல் இருக்கும் வாரச்சந்தைகளை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் வாரத்தில் 7 நாட்கள் நகர்ப்புற கிராமப்புறத்தில் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. அதில் திங்கட்கிழமை வைப்புதூர், செவ்வாய்க்கிழமை பெட்டவாய்த்தலை புதன்கிழமை லாலாபேட்டை, வியாழக்கிழமை பழைய ஜெயங்கொண்டம் பனிக்கம்பட்டி, வெள்ளிக்கிழமை குளித்தலை சித்தலவாய், தோகமலை, சனிக்கிழமை இரும்பூதிபட்டி ஆகிய பகுதிகளில் வாரச் சந்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மார்ச் மாதத்திலிருந்து கடந்த 6 மாத காலமாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் வாரச்சந்தைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்ததுது இதனால் வாரச் சந்தை காய்கறி வியாபாரிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் பொரிகடலை வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட வியாபாரிகள் வாரச்சந்தை சுங்க வசூல் ஒப்பந்தக்காரர்கள் எனஆயிரக்கணக்கானோர் இந்த வாரச்சந்தையை நம்பிதான் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.

ஆனால் தமிழக அரசு கோரோனோ பாதிப்பால் வாரச் சந்தைகளை மூட உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆறு மாத காலமாக வாரச் சந்தை நம்பி வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தமிழக அரசு தற்போது படிப்படியாக பல்வேறு துறைகளுக்கும் தளர்வு ஏற்படுத்தி செயல்படுத்த விட்டது போல் குளித்தலை பகுதியில் செயல்பட்டு வந்த வாரச் சந்தைகள் நடைபெறுவதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வடிக்கை எடுக்க வேண்டுமென குளித்தலை பகுதி வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Merchants ,area ,Bath , Kulithalai, corono, weekly market
× RELATED பூ மார்க்கெட் புனரமைப்பு கோவை...