×

இந்திய எல்லையில், சீன ராணுவம் வாலை ஆட்டுவதற்கு அதிபர் ஷி ஜின்பிங் தான் காரணம்: அமெரிக்க முன்னணி செய்தி நிறுவனம் பரபரப்பு தகவல்.!!!

வாஷிங்டன்: லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு அதிபர் ஜின்பிங் தான் திட்டமிட்டார் எனவும், இது தோல்வியில் முடிந்ததால், மற்றொரு தாக்குதலுக்கு அவர் திட்டமிடுகிறார் எனவும் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா, பூடான் போன்ற அண்டை நாடுகளின் எல்லை பகுதிகளில் சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்திய வீரர்கள் பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகப் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் முன்னணி நாளிதழ் ஒன்று இது தொடர்பாக செய்து ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதற்கு அதிபர் ஷி ஜின்பிங் தான் காரணம்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முயற்சியில் சீன ராணுவம் தோல்வியடைந்தது. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் தோல்வியானது பல விளைவுகளை ஏற்படுத்தும். சீன ராணுவத்தின் தலைவராகவும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் உள்ள , ஜின்பிங்கிற்கு, இந்தியா மீது மற்றொரு தாக்குதல் நடத்தவும் , இந்த தோல்வி தூண்டுவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வானில் நடந்த மோதலில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; இந்த பலி மேலும் அதிகரிக்கும். கல்வானில், இந்திய ராணுவம் கடுமையாக போராடியது. ஆனால், சீனா தனது தோல்வியை ஒத்து கொள்ளாது.

மலையின் உயரத்தில் சீனா சமீபத்தில் ஆக்கிரமித்த பகுதி ஒன்றை, இந்தியா மீண்டும் மீட்டெடுத்தது. இது சீன வீரர்களை பெரும் ஆச்சர்யமடைய செய்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் பதிலடிக்கு கொடுக்க முயன்றனர். ஆனால், சீனாவின் முயற்சி பலனளிக்கவில்லை என அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Xi Jinping ,military ,border ,Chinese ,Indian ,News Agency ,US , President Xi Jinping is the reason behind the Chinese military's tail wagging on the Indian border: US Leading News Agency Sensational Information. !!!
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...