×

புதுச்சேரியில் 1- 8-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ. 390 வரை ரொக்கம் நாளை முதல் விநியோகம்!!

புதுச்சேரி : புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிகள் மூலம் 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கத் தொகை நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு அளிக்கும் மதிய உணவைத் தர முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசியும், உணவுப் பாதுகாப்பு ஊக்கத்தொகையும் நாளை முதல் பள்ளிகளில் தரப்பட உள்ளது.
இது குறித்து  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், தினமும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் அரிசி, சமைப்பதற்கான செலவின ரொக்கத்தைப் பெறலாம்.1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தோருக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கமும் முதல் தவணையாகத் தரப்படும்.

 நாளை (15-ம் தேதி) 1, 2-ம் வகுப்புகளுக்கும், 16-ம் தேதி 3, 4-ம் வகுப்புகளுக்கும், 17-ம் தேதி 5, 6-ம் வகுப்புகளுக்கும், 18-ம் தேதி 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தரப்பட உள்ளது.அரசுப் பள்ளிகளில் முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்த குழந்தைகளின் பெற்றோர் அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று அரிசி, ரொக்கத்தைப் பெறலாம். இதைப் பெற ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,delivery , Puducherry, Government School, Students, Rice, Cash, Distribution
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...