×

இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பங்களித்த அனைத்து மொழியியலாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் : பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி : இந்தி மொழியின் வளர்ச்சிக்கு பங்களித்த மொழியியலாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தி திவாஸில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்தி மொழி வளர்ச்சிக்கு பங்களித்த அனைத்து மொழியியலாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பிரதமர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.இந்தி திவாஸுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் தங்கள் தாய்மொழியுடன் இந்தி மொழியையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.“இந்தி இந்தியாவின் கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதியாகும். சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​மக்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய ஊடகமாக இந்தி மொழி இருந்தது” என்று அமித்ஷா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே மும்மொழி கொள்கை, திமுக கனிமொழி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் இந்தியரா என்ற கேள்வியை எதிர்கொண்டது முதல் இயக்குநர் வெற்றிமாறன் விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தீவிரவாதி போல தான் நடத்தப்பட்டதாக கூறியது என பல காரணங்கள் இளைஞர்கள் மத்தியில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட களமாக தமிழகம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : linguists , Hindi Language, Development, All Linguists, Greetings, Prime Minister Modi, Tweet
× RELATED அமித்ஷா பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து