×

மருத்துவமனையில் மீண்டும் அமித்ஷா

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று முன்தினம் இரவு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2ம் தேதி அவருக்கு தொற்று உறுதியானது.  சிகிச்சையில் குணமானதால் கடந்த மாதம் 14ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், 18ம் தேதி மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால், டெல்லி எயம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, கடந்த 31ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும்  அவர் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக முழு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ’என கூறப்பட்டுள்ளது.

Tags : Amitsha ,hospital , Amitsha back in the hospital
× RELATED அமித்ஷாவுக்கு எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்து