×

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான சென்னை மாணவர்கள் 2 பேரின் உடல் மீட்பு

சென்னை: கோடம்பாக்கம் காமராஜர் நகரை சேர்ந்த முருகன் மகன் ஹரிகர விக்னேஷ் (17), வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த சாகு மகன் ஆகாஷ் (14), அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். உறவினர்களான இவர்கள், நேற்று முன்தினம் மாமல்லபுரத்தை சுற்றி பார்ப்பதற்காக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக டெம்போ டிராவலரில் குடும்பத்தோடு 11 பேர் சென்றனர். அவர்கள் தெற்குபட்டு கடற்கரை ஓரம் காலி இடத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

அப்போது, ஹரிகர விக்னேஷ், ஆகாஷ் ஆகிய இருவரும் கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். இதனை பார்த்த உறவினர்கள் அலறி கூச்சலிட்டனர். அருகில் இருந்த மீனவர்கள் கடலில் இறங்கி 2 பேரையும் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் படகில் கடலுக்குள் சென்று தேடினர். ஆனாலும், கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் ஹரிகர விக்னேஷ், ஆகாஷ் ஆகியோரின் உடல் நேற்று கோவளம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

Tags : sea ,Chennai ,Mamallapuram , Mamallapuram sea, while bathing, magical Chennai students, 2 persons, body recovery
× RELATED சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை