அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணி: தாசில்தார் ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை பணியில் 2ம் கட்டமாக ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பு முகாம் சிறுவர், சிறுமிகள் வயதானோர் மற்றும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு ஊட்டச்சத்து மாத்திரை வழங்கும் முகாம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். இந்நிலையில், நேற்று பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், கொரோனா நோய் தடுப்பு துறை தாசில்தார் புகழேந்தி ஆகியோர் அத்திப்பட்டு ஊராட்சியில் அடங்கிய 12 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 2ம் கட்டமாக வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணைத் தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், ஊராட்சி செயலர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் நேரடியாக சென்று வீட்டில் உள்ள ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட அனைவருக்கும் உடல் வெப்பம், இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். மேலும், அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அவர்களுக்கு கொரொனா நோய் தடுப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கி, மாஸ்க் அணிதல் மற்றும் கைகழுவுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories:

>