×

வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து மாடு சாவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56) .இவர் 20க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இவரது மனைவி அற்புதம் (50) மேய்ச்சலுக்காக மாடுகளை அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென வயல்வெளியில் இருந்த விவசாய பம்ப் செட்டிற்கு செல்லும் மின் வயர் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே மாடு இறந்தது. உடனே அருகில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து பார்த்து கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் கால் நடைத்துறையினர் வருவதற்கு பல மணி நேரம் ஆனதால் அங்கேயே மாடு கிடந்தது. பின்னர் தாமதமாக வந்த மருத்துவர்கள் அந்த மாட்டை பிரேத பரிசோதனை செய்தனர்.

Tags : field , Grazing in the field, electricity flowing, cow death
× RELATED வசதி படைத்தவர்களுக்கு மாடு கொட்டகை ஒதுக்கீடு