புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு

காஞ்சிபுரம்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தனர்.

ஜாக்டோஜியோ மாநில அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் முடிவின்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் காஞ்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தி.சேகர், லெனின் ஆகியோர் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் கௌரி அன்பு, உத்திரமேரூர் வட்டார செயலாளர் பாலமுருகன், உத்திரமேரூர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வெங்கடபதி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணலரசு, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், காஞ்சி ஒன்றிய அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>