×

வாட்ஸ்அப் குழு அமைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது: 25 கிலோ கஞ்சா, ஆட்டோ பறிமுதல்

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வாட்ஸ்அப் எண்ணை கண்டறிந்த போலீசார், அதில் வாடிக்கையாளர்கள் சாட்டிங் செய்து, கஞ்சா தேவைப்படுவதாக வியாபாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதற்கு, ராயப்பேட்டை ரோட்டரி நகர் மற்றும் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் காத்திருக்கும்படி எதிர்முனையில் தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் சாதாரண உடையில் அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் காத்திருந்தனர். அப்போது, அவர்கள் குறிப்பிட்டபடி ஆட்டோவில் 3 பேர் கஞ்சா கொடுக்க வந்தனர்.

அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பட்டாளம் ஸ்டாரன்ஸ் சாலையை சேர்ந்த கணேஷ் (34), ராயப்பேட்டை ரோட்டரி நகர் 10வது தெருவை சேர்ந்த விஜய் தினேஷ் (30), திருவல்லிக்கேணி அயோத்தி குப்பத்தை சேர்ந்த கீதன் (23) என்பதும், இவர்கள் வாட்ஸ் குழு அமைத்து சென்னையில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.5,600 மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : group , WhatsApp group, cannabis, 3 people, arrested, 25 kg of cannabis, auto confiscated
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.