×

தமிழகத்தில் புதிதாக 5,693 பேருக்கு வைரஸ் தொற்று; கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. தமிழக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 84,308 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,693 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 994 பேர், செங்கல்பட்டில் 299 பேர், திருவள்ளூரில் 300  பேர், காஞ்சிபுரத்தில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை, சேலம் உள்பட சில மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் செப்டம்பர் 13ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனாவால் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரத்து 201 ஆண்கள், 1 லட்சத்து 99 ஆயிரத்து 529 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,717 பேர் குணமடைந்துள்ளனர். தமிழக அளவில் இதுவரை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 47 ஆயிரத்து 12  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் கொரோனாவால் மட்டும் மரணம் அடைந்துள்ளனர். இது தவிர 66 பேர் இணை நோய் மற்றும் கொரோனா காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,Corona , 5,693 new infections in Tamil Nadu; Corona damage exceeded 5 lakhs
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...