×

கோயில்களில் திருமணத்துக்கு அனுமதி மறுப்பு; பக்தர்கள் கொதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரேனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், ேகாயில்களில் திருமண நடத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த செப். 1ம் தேதி முதல் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். மேலும், சமூக இடைவெளியுடன் கோயில்களில் தினமும் ஒரே ஒரு திருமணம் நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பலரும் கோயில்களில் திருமணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், ஒரு நாளைக்கு ஒரு திருமணத்துக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒருவருக்கு மட்டுமே திருமணத்துக்கு அனுமதி அளித்தால் மற்றவர்கள் கோயில் நிர்வாகத்திடம் பிரச்னையில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, பெரும்பாலான கோயில் நிர்வாகம் சார்பில் இப்பிரச்னையை தவிர்க்கும் வகையில், திருமணம் நடத்த அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கோயில்களுக்கு சொந்தமான மண்டபங்களில் திருமணம் நடத்துவது தொடர்பாக ஆணையர் அலுவலகம் சார்பில் உரிய அறிவுரை வழங்கப்படவில்லை. இதனால், கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் மண்டபங்களில் திருமணம் நடத்திக் கொள்வதற்கும் அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது.  இதனால், அறநிலையத்துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : temples ,Devotees , Denial of permission for marriage in temples; Devotees boil
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு