×

இந்திய எல்லையில் சீனா-திபெத் போர் பயிற்சி..!! இமயமலையில் படை வீரர்கள் ஒன்றிணைந்து சாகசம்!!!

இந்தியா:  இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய எல்லையில், சீனா-திபெத் இராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. அதாவது கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி லடாக் எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளை இந்திய படைவீரர்கள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும் , பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. இருப்பினும் சீன இராணுவம் தொடர்ந்து எல்லை மீறி செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று 5 அம்ச திட்டம் மூலம் எல்லையில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில், தற்போது, இந்திய எல்லையில் சீனா-திபெத் இராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதாவது, இமயமலையில் 5 ஆயிரத்து 100 மீட்டர் உயரமான பகுதியில் இந்த பயிற்சிகள் நடைபெற்றன. இவற்றில் போர் ஒருங்கிணைப்பு, துப்பாக்கி சூடு, வான்வழி தாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அரங்கேறின. விமானப்படை வீரர்கள் மற்றும் இராணுவத்தினர் வானில் பறந்து 19 போர் வித்தைகளை செய்து காட்டினர். தொடர்ந்து, தற்போதுள்ள நவீன ஆயுதங்கள், கவச வாகனங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகள் உள்ளிட்டவையும் எல்லையில் குவிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. மேலும் இந்த பயிற்சியில் ஒரு மோதலின் போது செயற்படுவதைப் போன்றே ஆயுதங்களை பயன்படுத்தி, டாங்கிகளை இயக்கி, ஏவுகணைகளை ஏவ தயார் செய்து பயிற்சிகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து, இதில் இரவு நேர இயக்கம், தொலைதூர தாக்குதல் மற்றும் கடற்படை இலக்குகளை தாக்குவது போன்ற பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இவை மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tibet ,China ,war exercise ,border ,Indian ,Himalayas , China-Tibet war exercise on Indian border .. !! Adventure together in the Himalayas !!!
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...