×

நீட் தேர்வில் இந்தாண்டும் பல இடங்களில் குளறுபடி அரங்கேற்றம்..!!! உளவியல் ரீதியான நெருக்கடி என பெற்றோர்கள் குமுறல்!!!

தென்காசி:  நீட் தேர்வில் தமிழகத்தில் இந்தாண்டும் பல இடங்களில் குளறுபடி அரங்கேறியதால், தேர்வு எழுந்த வந்த மாணவர்களும் உடன் வந்த பெற்றோர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மதியம் 2 மணி தேர்வுக்கு மாணவர்கள் காலை 11 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் உணவு வசதி இல்லாததால், மாணவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது. மேலும் பல மணி நேர காத்திருப்பு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்தாண்டும் தேர்வெழுந்த வந்த மாணவர்களிடம் அதிக கெடுபிடி கட்டப்பட்டுள்ளது.

தோடு, செயின், வளையல் மற்றும் பெல்ட் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பல இடங்களில் தலைவிரி கோலத்தில் தேர்வு எழுதினர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த முத்துலெட்சுமி என்ற பெண்மணி தாலி, மெட்டியை கழற்றி கொடுத்துவிட்டு நீட் தேர்வினை எழுத சென்றார். மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும் மாணவர்களை சோதனை நடத்தினர். மேலும் ஒவ்வொரு மையத்திலும் ஒவ்வொரு மாணவர்களையும் வீடியோ எடுத்தபின் உள்ளே அனுமதித்தனர்.

இதனையடுத்து திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை அருகே சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வு மையத்தை தேடி அலைந்தனர். மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே பெற்றோர்கள் அமர வசதி இல்லாததால், அவர்கள் சாலைகளில் அமரும் நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் 238 மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதுகின்றனர். ஆனாலும், உணவு இல்லை, போக்குவரத்து வசதி இல்லை, பெற்றோர் தங்குவதற்கு இடமில்லை, மழையிலும் சோதனை என இந்தாண்டும் அதிக கெடுபிடிகளும், குளறுபிடிகளும் அரங்கேறியுள்ளன.

Tags : debut ,places ,Parents ,crisis , Messy debut in many places this year in NEET exam .. !!! Parental murmur as a psychological crisis !!!
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...