×

நீட் தேர்வு அச்சத்தால் ராணிப்பேட்டை மாணவி சௌமியா தற்கொலை முயற்சி..!!! தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!!

ராணிப்பேட்டை:  நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்,  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரின் மகள் சௌமியா. இவரே தற்கொலைக்கு முயன்றவராவார்.  12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இவர் நீட் தேர்விற்காக பயிற்சியை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கடும் எதிர்ப்புகளுக்கிடையில் இன்றைய தினம் நீட் தேர்வானது திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், தேர்வு அச்சம் காரணமாக வீட்டிலிருந்த மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டு மாணவி சௌமியா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனையடுத்து அவர் இராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கரூரில் நீட் தேர்வு எழுந்த வந்த மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு வேறு ஒரு நாளில் தேர்வு எழுத தேர்வு மைய அதிகாரி அனுமதி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், எப்போது? தேர்வு என்பது பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

Tags : Soumya ,suicide ,Ranipet ,hospital , Ranipet student Soumya attempts suicide due to fear of NEET exam .. !!! Admitted to hospital in critical condition !!!
× RELATED தருமபுரி அருகே சௌமியா அன்புமணி காரை மறித்து பறக்கும் படையினர் சோதனை!!