×

மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவு உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையானது ஏழை மக்கள் மீதான தாக்குதலாகும், கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர் என்று அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான போரை சரியாக திட்டமிடாமல் நடத்துவதால் இந்தியா படுகுழியில் விழுந்துள்ளது.

மத்திய அரசின் திட்டமிடப்படாத நடவடிக்கையால் வரலாறு காணாத அளவுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி 24 சதவீதம் குறைந்து இருப்பதாகவும், 12 கோடி வேலைவாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும், ரூ.15½ லட்சம் கோடி கூடுதல் கடன் சுமை ஏற்பட்டு இருப்பதாகவும், உலக அளவில் கொரோனா பாதிப்பும், சாவும் மிகவும் உயர்ந்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இவ்வளவு பாதிப்புகள் இருந்தும், இந்தியாவில் நிலைமை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறுவதாகவும் அவர் குற்றம் சாடியுள்ளார்.



Tags : government ,Rahul Gandhi , Unprecedented decline in GDP due to unplanned action by central government: Rahul Gandhi
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு