×

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய மேம்பாலம் கட்டுமான பணி நிறைவு

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் இருந்து பயணிகள் டிக்கெட் வாங்கிய பிறகு ரயில் நிலையத்திற்கு செல்ல ஆங்கிலேயர்கள் காலத்தில் உயர்மட்ட பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. 140 ஆண்டு பழமை வாய்ந்த இந்த பாலம் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதை மின்மயமாக்க பட்டதால் இடிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் வாங்கி ரயிலுக்கு செல்லக்கூடிய பயணிகள் தண்டவாளத்தை கடந்து ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இது பயணிகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற காரணத்தினால் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் புதிய பாலம் கட்டுவதற்கான இடம் மற்றும் பாலத்தின் அருகிலேயே ரயில் பயணத்திற்கான பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் அலுவலகமும் கட்டுவதற்கு  முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முதற்கட்டமாக உயர்மட்ட பாலத்திற்கான கட்டுமான பணிகள் பணிகள் நிறைவடைந்துள்ளது.  புதிய ரயில் பயணத்திற்கான பயணிகள் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் கட்டுமான பணிகளும் நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் தற்போது ரயில்நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் அதிக உயரத்தில்  இருப்பதால் வயதானவர்களும், உடல்நலம் பாதிக்கப் பட்டவர்களும் இந்தப் பாலத்தில் ஏறி செல்ல முடியாத  நிலை உள்ளதால் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி நகரும் நடைமேடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர் அப்போது தான் அனைவரும் உயர்மட்ட பாலத்தை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags : Mettupalayam Railway Station , Mettupalayam, railway station, over lay bridge,
× RELATED மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து