×

ஊட்டி-கூடலூர் சாலையோரம் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர்- ஊட்டி சாலையில் நடுவட்டம் - டி.ஆர் இடையே சாலையோரங்களில் உள்ள பாறையிடுக்குகளில் பூத்துள்ள நீலக் குறிஞ்சி மலர்கள் இவ்வழித்தடத்தில் பயணிப்போரை பரவசப் படுத்தி வருகின்றன. இப்பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதாலும் அடிக்கடி பனிமூட்டம் இருப்பதாலும் பெரும்பாலானோர் இந்த பூக்களை அடையாளம் கண்டு ரசிக்க முடிவதில்லை. இந்த வகையான பூக்கள் ஒரு முறை பூத்தால் மீண்டும் 12 வருடங்கள் கழித்த பின்பே என்றும் இதற்கான சரியான கால அளவுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் ஆய்வுகளில் தெரிவிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிஞ்சி மலர்களின் இதழ்கள் ஊதா நிறத்திலும் உள் பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. பொதுவாக இவை நீலக்குறிஞ்சி என அழைக்கப்படுகின்றது. பாறைகளுக்கு இடையே இருப்பதால் கல் குறிஞ்சி என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு.  பண்டைய காலம் தொட்டே  குறிஞ்சி நிலத்தை வகைபடுவதற்கு இது ஆதாரமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 12 ஆண்டுக்கு முன் இதே பகுதியில் இந்த வகை பூக்கள் பூத்துள்ளதை இப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.  இதே பூக்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பூத்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.


Tags : Ooty-Kudalur , Ooty, Cuddalore, Blueberry flowers , Neelagiri
× RELATED ஊட்டி-கூடலூர் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது; 5 பேர் உயிர் தப்பினர்