×

ஊட்டி பூண்டு கிலோ ரூ.350க்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டி :  ஊட்டி பூண்டுக்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில், அவற்றை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு  அடுத்தப்படியாக சுமார் 7ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொல்லிமலை, கேத்தி பாலாடா, காட்டேரி, முத்தோரை பாலாடா, ஏக்குணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டது.

 நல்ல மகசூல் கிடைத்து வந்த நிலையில் தற்போது மேட்டுபாளையம் மொத்த விற்பனை மண்டியில் நீலகிரி பூண்டு கிலோவிற்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாகி வருகிறது. இதனை தொடர்ந்து பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள், நாள்தோறும்  அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.நீலகிரி பூண்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காட்டேரி டேம் செலவிப்நகர் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூண்டு பயிரிட்டிருந்தோம். தற்போது பூண்டுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பூண்டு விலை ஏறி உள்ளதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது என்றார்.

Tags : garlic sale ,Ooty , ooty Garlic,Garlic, farmers happy
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்