×

காரைக்காலில் நீட் தேர்வுக்கு மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து திடீரென பழுது...!!! புதுச்சேரிக்கு செல்ல மாணவர்கள் தவிப்பு!

காரைக்கால்:  காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கு நீட் தேர்விற்காக மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து வழியிலேயே பழுதடைந்து நின்றதால் மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் சுமார் 4842 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற உள்ளது. இந்த நிலையில், காரைக்காலில் தேர்வு மையம் இல்லை என்பதால், அந்த மாவட்டத்தை சேர்ந்த 250 மாணவர்கள் மற்றும் பெற்றோரை புதுச்சேரிக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் 12 பேருந்துகளில் மாணவர்களும் பெற்றோர்களும் ஏற்றி செல்லப்பட்டனர். மேலும் அவர்களுக்கு முகக்கவசம் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வெப்ப சோதனை நடத்தப்பட்டு பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு சென்ற பேருந்து ஒன்று தரங்கபாடி அருகே திடீரென பழுதாகி நின்றது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் வழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், பழுது நீக்கப்பட்டு பேருந்தானது புதுச்சேரி தேர்வு மையத்திற்கு கால தாமதாக புறப்பட்டு சென்றது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags : Karaikal ,Puducherry , In Karaikal, for NEET exam, students, bus, abrupt repair
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...