×

கடும் எதிர்ப்புகளுக்கிடையே நீட் தேர்வு..!! தீவிர சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதி!!!

சென்னை:  கடும் எதிர்ப்புகளுக்கிடையில் இன்றைய தினம் திட்டமிட்டபடி நீட் தேர்வானது நடைபெற இருக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் சுமார் 3800 மையங்களிலும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுந்த உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 238 தேர்வு மையங்களில் நீட் தேர்வானது நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தை பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். இதற்கிடையில், கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒரு சில முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்தாண்டு சில கூடுதலான விதிமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், கொரோனா தொற்று காணரமாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் ஒவ்வொரு மையத்திற்கு வெளியேயும் வரையப்பட்ட வட்டத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் தங்கள் கைகளில் கையுறை, சானிடைசர், மற்றும் வாட்டர் பாட்டில்கள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் மாணவரின் ஹால்டிக்கெட், அரசு வழங்கியுள்ள சான்று மற்றும் விண்ணப்பம் செய்தபோது பயன்படுத்திய அந்த புகைப்படம் உள்ளிட்டவற்றை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்தாண்டு புகைப்படங்களில் முறைகேடு நடந்ததால், தற்போது விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய அதே புகைப்படத்தை கொண்டு வர வேண்டுமென தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் வகுப்பறைகளில் மாணவர்களை 6 அடி இடைவெளியுடன் அமர வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரின் உடல் வெப்ப நிலையானது கண்டிப்பாக பரிசோதிக்கப்படும், அப்போது 95 பேரன் ஹீட்டுக்கு அதிகாமாக உடல் வெப்ப நிலை இருந்தால், உடனடியாக அந்த மாணவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வினை நடத்த தனி தேர்வு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே போக்குவரத்து காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.

Tags : examination center , Strong resistance, NEET exam, intensive tests, students selection, admission
× RELATED 2236 பேர் பங்கேற்று பயன்: திருமயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்