×

ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெயக்குமார் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக

சென்னை: ராயபுரம் தொகுதியில் கடந்த 1991ம் ஆண்டு முதல்முறையாக ஜெயக்குமார் போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயக்குமார் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மதிவாணன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, ராயபுரம் தொகுதியில் நடந்த அடுத்தடுத்த தேர்தல் அதாவது 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றார். இதனால், ராயபுரம் தொகுதி அதிமுக கோட்டை என்று அழைக்கப்பட்டது. இந்த தொகுதியில் மீனவ சமூகத்தினர் 50 சதவீத வாக்குகள் இருப்பதாக தெரிகிறது. அந்த சமூகத்தைச் சேர்ந்தவராக அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தும், மீனவ சமூக மக்களுக்கு அவர் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தும் அவர் ராயபுரம் தொகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, மக்களின் முக்கிய பிரச்னையாக கூறுவது முறையற்ற குடிநீர் விநியோகம் மற்றும் மோசமான குப்பை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தொகுதி மக்கள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனால், ராயபுரம் தொகுதியில் 5வது முறையாக போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் தொகுதி பிரசாரத்துக்கு சென்ற இடம் எல்லாம் கடும் எதிர்ப்பு இருந்தது. இதனால், இம்முறை தோல்வி பயத்தில் இருந்த அவர் தொகுதியை சுற்றி, சுற்றி வந்தார். ஆனால் மக்கள் மத்தியில் அவரது பிரசாரம் பெரிய அளவில் எடுபடவில்லை. இது, பிரசாரத்தின் போதே பல இடங்களில் தெரிந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணிக்கையின் போது அவருக்கு விழுந்த வாக்குகள் மூலம் முழுவதுமாக நிரூபணமாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று மட்டுமின்றி அடுத்தடுத்த சுற்றுகளில் அமைச்சர் ஜெயக்குமார் கடும் பின்னடைவை சந்தித்தார். குறிப்பாக, மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே திமுகவுக்கு தான் வாக்குள் அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால், தான் நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் தொடர்ந்து, ராயபுரம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ஜெயக்குமாருக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளது….

The post ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெயக்குமார் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக appeared first on Dinakaran.

Tags : Jaikumar ,Raipur ,Dimuka ,Chennai ,Jayakumar ,Dhimuka ,MLA ,Dinakaraan ,
× RELATED என்கவுன்டரில் நக்சல் பலி