×

குடியிருப்புவாசியை துப்பாக்கியால் மிரட்டிய தம்பதி மீது 4 பிரிவுகளில் வழக்கு : தடயவியல் நிபுணர்கள் நேரில் ஆய்வு

பெரம்பூர்: அயனாவரம், சோலை தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் நோபல் மங்கள் குமார், அவரது மனைவி மெர்லின் வசித்து வருகின்றனர்.  இவர்கள் கடந்த 7 வருடங்களாக அடுக்குடியிருப்பின் பராமரிப்பு செலவுக்கு பணம் தரவில்லை, என கூறப்படுகிறது.கார் பார்க்கிங், பராமரிப்பு என எந்த விஷயத்திலும் தன்னிடம் எதுவும் பேச கூடாது என மிரட்டி வந்த நோபல் மங்கள் குமார், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே குடியிருப்பில் வசிக்கும் முத்துகுமரன் என்பவரிடம் கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு செய்து,  துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர் உட்பட குடியிருப்புவாசிகள் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் நேரில் சென்று குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே,  நோபல் மங்கள் குமார் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.  இந்நிலையில் தலைமறைவாக உள்ள தம்பதி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   நேற்று தடயவியல் துறை உதவி இயக்குனர் சோபியா ஜோசப்  அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று மொட்டை மாடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது மொட்டை மாடியில் பல இடங்களில் துப்பாக்கி தோட்டாக்கள்  பதிந்த வடு இருப்பது தெரிந்தது. அதனை  பதிவு செய்து ஒரு மணி நேரம் விசாரணை செய்துவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். தலைமறைவாக உள்ள தம்பதியை அயனாவரம் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : resident ,interview ,experts , Resident, intimidated by gun, case in 4 sections
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...