×

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்: நிரந்தர பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சென்னை: ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,725 வழங்க வேண்டும், துப்புரவு பணியை தனியாருக்கு அளிக்க கூடாது, என்யூஎல்எம், என்எம்ஆர் தொழிலாளர்களின் வேலையை பறிக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் இழுப்பீடு வழங்க வேண்டும், அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத் ெதாகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த காவல் துறையினர் தர்ம பிரகாஷ் மண்டத்தில் அடைத்தனர். அங்கும் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தினக்கூலி 379 ரூபாய் என்பதை 391 ரூபாயாக உயர்த்தி இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2,160 ரூபாய் நிலுவைத் தொகையுடன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 15 மண்டலங்களில் மண்டல அலுவலர்கள் இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இதுவரை 100 முதல் 200 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூப்படுகிறது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ெதாழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், பணி நீக்கம் தொடர்பாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதில் எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும், என்றனர்.

Tags : contract workers , The corporation fired 100 employees, demanding a pay rise
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...