×

6 மாதத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

புதுடெல்லி: கடந்த 6 மாதத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் விலையை படுவேகமாக அதிகரிக்கத் தொடங்கின. பெட்ரோல் விலை கடந்த ஜூன் 7ம் தேதி முதல் ஜூலை 29க்குள் ₹9.17 காசுகள் உயர்த்தப்பட்டது. டீசல் விலை கடந்த 7 முதல் ஜூலை 25 வரை ₹12.55 காசுகள் உயர்த்தப்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு பொருளாதார நடவடிக்கையை தொடங்கும் சமயத்தில் இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஏறுமுகமாக மட்டுமே இருந்து வந்த டீசல் விலையில் முதல் முறையாக கடந்த 3ம் தேதி லேசான சரிவு ஏற்பட்டது. அப்போது 63 காசுகள் குறைக்கப்பட்டன. செப்டம்பர் 10ம் தேதி பெட்ரோல் விலையில் 9 காசுகள் குறைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த 6 மாதத்தில் 2வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலை சரிந்தது. பெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகளும், டீசல் 12 காசுகளும் குறைந்தன. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹84.85க்கும், டீசல் லிட்டருக்கு ₹78.26 ஆகவும் விற்கப்படுகிறது.  டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹81.86, டீசல் ₹72.93 ஆகவும் விற்கப்படுகிறது.

Tags : In 6 months, for the 2nd time, petrol, diesel
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...