×

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி சேலத்தில் கழுதைப்பால் ஒரு சங்கு ரூ.50க்கு விற்பனை

சேலம்:  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி, சேலத்தில் கழுதைப்பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சேலம் மாநகரத்தில் நேற்று அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழுதை மற்றும் அதன் குட்டியை அழைத்து வந்து வீதி, வீதியாக கழுதைப்பால் விற்பனை ஜோராக நடந்தகிறது. கேட்கும் நபர்களுக்கு அந்த இடத்திலேயே கறந்து ஒரு சங்கு ₹50க்கு விற்கிறார்கள். தற்போது வேகமாக பரவும் கொரோனாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆயுர்வேத மருந்துகள், சித்த மருந்துகள், நாட்டு மருந்துகளை சாப்பிடுவதுபோல கழுதைப்பாலையும் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறி விற்கிறார்கள்.

Tags : Salem , Immunity, in Salem, donkey milk, conch for Rs.50
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...