×

எண்ணெய் கிணறுகள் தோண்ட கால நீட்டிப்பு காவிரி படுகை காணாமல் போகும் அபாயம் ஏற்படும்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம்

மயிலாடுதுறை: காவிரி படுகையில் எண்ணெய் கிணறுகள் தோண்ட 3 ஆண்டு அனுமதித்து கால நீட்டிப்பு செய்துள்ளதற்கு  மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரிப்படுகையில் 24 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்க 2013ல் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு  சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பின் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக கிணறுகளை ஓஎன்ஜிசி ஆல் அமைக்க முடியவில்லை. காவிரிப்படுகையில், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 24 கிணறுகளில் 16 கிணறுகளை தொடக்க நிலையிலேயே ஓஎன்ஜிசி அமைத்து விட்டதாகக் கூறுகிறது. மீதியுள்ள கிணறுகளை அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி காலநீட்டிப்பு அனுமதிகோரி விண்ணப்பித்திருந்தது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்க சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் காவிரி படுகையில் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இது காவிரி படுகை மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. சுற்றுச்சூழல் துறையின் இந்தப் போக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஓ.என்.ஜி.சி. காவிரிப் படுகையில் 104 கிணறுகளை அமைக்கக்கூடிய பெரும் திட்டத்தை வைத்துள்ளது. 2019 ல் மட்டும் காவிரிப் படுகையில் 489 எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால்  காவிரிப்படுகை என்பது காணாமல் போகும் அபாயம் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : drilling ,disappearance ,oil wells ,Cauvery Basin: Coalition , Oil well, drilling, extension Cauvery bed, methane project, federal condemnation
× RELATED 720 தெருக்களின் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி