×

விதவிதமா, கலர் கலரா எதற்கு? மாட்டு சாணத்தில் மாஸ்க் கோமியத்தில் சானிடைசர்: பட்டய கிளப்புகிறது மத்திய அரசு ஆணையம்

புதுடெல்லி: நீங்களும் விதம் விதமாய் மாஸ்க் வாங்கறீங்க...சானிடைசர் வாங்கி கைகளை கழுவறீங்க...மத்திய அரசு அமைப்பு என்ன சொல்லுது தெரியுமா? மாட்டுச் சாணத்தில் மாஸ்க்  அணியுங்க... பசுவின் கோமியத்தில் (சிறுநீர்) சானிடைசர் வாங்கி கையை சுத்தம் செய்யுங்க. கொரோனா உங்க கிட்ட கூட நெருங்காது; இது உத்தரவாதம்ன்னு பிரசாரம் செய்கிறது.    மாடுகள் அபிவிருத்தி, மாடுகள் சம்பந்தப்பட்ட மருத்துவ, அறிவியல் சாதனங்கள் பற்றி  ஆராய்ச்சி செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு ஆணையத்ைத நிறுவியுள்ளது. கடந்த ஓராண்டாக  தீவிரமாக  ஆராய்ச்சி பணிகளில் இறங்கி வரும் இந்த ஆணையம் மூலம் மாடு சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவ குணமுள்ள பொருட்கள் தயாராகி விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

  இந்த அமைப்பின் பெயர் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக். அதாவது, தேசிய மாடுகள் ஆராய்ச்சி ஆணையம் என்பது. கடந்த புதன் கிழமை அன்று இந்த ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கத்திரியா வெபிநார் மூலம் வெப் கருத்தரங்கை நடத்தினர். இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்,பாஜ கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.   இதில் கத்திரியா, மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட முக கவசம், மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சானிடைசர் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.   அவர் பேசியதாவது: மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம் இரண்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. இதை பல காலமாக நம் முன்ேனார்கள் கூறி வந்துள்ளனர். நாங்கள் இதை இப்போது தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு, நாடு முழுவதும் இவற்றை மக்களிடம் பிரபலப்படுத்த உள்ளோம்.

  மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் என்றால் சிலர் கேலி செய்கின்றனர். ஆனால், இதில் உள்ள மருத்துவ குணங்களை வௌிநாட்டு நிபுணர்கள் கூட வியந்துள்ளனர். நாம் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இப்போது நாங்கள் தயாரித்துள்ள மாட்டுச்சாண முக கவசம், மாட்டு சிறுநீர் சானிடைசர் இரண்டும் நாடு முழுவதும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தப்போவது உறுதி.
  இதற்கு முன் மாடுகள் மூலம் பல பொருட்களை தயாரித்து வந்துள்ளோம். மேலும் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் உரத்துக்கு பதிலாக மாட்டு சாணத்தில் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை தயாரிக்க உள்ளோம்.   இவ்வாறு அவர் பேசினார்.

சாணத்தில் பிள்ளையார் அமோக வரவேற்பு
சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி, மாட்டுச்சாணத்தில் விநாயகர் சிலை தயாரிப்பை ஆணையம் ஊக்குவித்தது. வெபிநார் மற்றும் ஆன்லைன் மூலம், பல சிறிய தொழில் ஊக்குனர்களுக்கு மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் தயாரிப்பது குறித்து பயிற்சியும் அளித்தது.  இதன் பின், வட மாநிலங்களில் மாட்டுச்சாண பிள்ளையார் விற்பனைக்கு வந்தது; அமோகமாக விற்பனை ஆனது என்றும் கத்திரியா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மாட்டுச்சாண பொருட்கள்

* கைப்பை, பைகள்
* தபால் உரைகள்
* பொம்மைகள்
* அலங்கார பொருட்கள்
* முக கவசம்
* நாற்காலி
* ஈசி சேர்
* விவசாய சாதனங்கள்

மாட்டு கோமியத்தில்...

* பவுடர்
* மாத்திரை
* சானிடைசர்

Tags : Charter Clubs Federal Commission , Variously, Color Cholera, in cow dung, in mask makeup, sanitizer
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்