×

சீனாவுக்கு மேலும் கடிவாளம் போட உத்தரகாண்ட் மலை மாவட்டங்களில் ரேடார் மையம், விமான ஓடுபாைத: விமானப்படை திட்டம்

டேராடூன்: லடாக் எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக விமானங்கள் இறங்குவதற்கான தளங்களும், ரேடார் தளமும் அமைப்பதற்கு இடம் வழங்கும்படி விமானப்படை கேட்டுள்ளது. லடாக் எல்லையில்  இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இருதரப்பும் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. சீனா போர் தொடுக்கும் பட்சத்தில் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்காக, இந்தியா தனது முப்படைகளையும் களத்தில் இறக்கி, தயார்நிலையில் வைத்துள்ளது. எல்லையில் இந்திய போர் விமானங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், சீனா எல்லைக்கு அருகில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்திலும் விமானப்படையின் தளங்களை விரிவுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், மேற்கு விமான படைப்பிரிவு தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில்தான், உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப் பகுதிகளில் வான் பாதுகாப்பு ரேடார்கள் தளங்கள் அமைப்பது, போர் விமானங்கள் அவசரமாக தரை இறங்குவதற்கான ஓடுபாதைகள், விமானப்படை தளங்களை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் தனது எல்லைகளை அண்டை நாடுகளான சீனா, நேபாளத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் மலைப்பாங்கான மாவட்டங்களான சாமோலி, பிட்கோராகர், உத்தரகாஷி ஆகியவற்றில் வான் பாதுகாப்பு ரேடார்கள், விமான ஓடுபாதைகள், தளங்கள் அமைத்தால் வடகிழக்கு பகுதிகளில் விமானப் படைக்கு உதவியாக இருக்கும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை மேற்கு விமான படைப்பிரிவு தலைவர் ராஜேஷ் குமார் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எல்லைப் பகுதியில் விமான படையின் பணிகளை விரிவுப்படுத்துவதற்காக தேவைப்படும் நிலங்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.  பான்ட் நகர், ஜாலி கிராண்ட் மற்றும் பித்கோராகர் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதோடு,  சக்குடியாவில் விமான நிலையம் அமைப்பதற்காக இடம் வழங்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

‘உடனடியாக நிலம் வழங்கப்படும்’
விமானப்படை பிரிவு தலைவருடன் நடத்திய பேச்சுக்குப் பிறகு உத்தரகாண்ட் முதல்வர் ராவத் கூறுகையில், ‘‘விமானப்படை கேட்டுக் கொண்டபடி, முன்னுரிமை அடிப்படையில் அதற்கு நிலங்கள் வழங்கப்படும். இதற்கு பொருத்தமான இடங்களை விமானப்படையுடன் இணைந்து தேர்வு செய்வதற்காக உடனடியாக குழு அமைக்கப்படும்,’’ என்றார்.

Tags : Radar station ,hill districts ,Uttarakhand ,China ,Air Force ,airstrikes , To China, to lay the reins, the radar center, the airstrikes, the air force project
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...