கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் தனது தொகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து, கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>