×

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மீண்டும் பரிசோதனை

லண்டன்: ‘கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை மீண்டும் தொடங்கப்படும்’ என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்த மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதால், சில தினங்களுக்கு முன் பரிசோதனை நிறுத்தப்பட்டது.

இது கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் விவகாரத்தில் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலை நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘பரிசோதனையில் சில பங்கேற்பாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒவ்வொரு அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பரிசோதனை மீண்டும் தொடங்கப்படும் என  கூறியுள்ளது.


Tags : Re-examination ,Oxford , Re-examination of the Oxford vaccine
× RELATED நவம்பரில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ரெடி