×

ஒரேநாளில் 12 கடைகளை உடைத்தவன் கோயம்பேட்டில் 3 கடைகளில் கொள்ளையடித்தவன் கைது: பணம் - பொருட்கள் பறிமுதல்

அண்ணாநகர்: கோயம்பேட்டில் 3 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்ற வாளி நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டான் அவனிடமிருந்து 90 ஆயிரம் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விருகம்பாக்கம், காமராஜர் சாலையில் வசிப்பவர் குமார் (54). இவர், கோயம்பேடு அருகே நெற்குன்றத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 9-ம் தேதி இவரது கடை உள்பட 3 கடைகளை உடைத்து 1.50 பணம் கொள்ளை போனது. புகார்களின்பேரில் வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் ஈடுபட்டது பழைய குற்றவாளி மார்க் (29) எனத் தெரியவந்தது.

 இவருக்கு குடும்பம், வீடு எதுவும் இல்லாததால் பீச், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மார்க் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து இன்ஸ்பெக்டர் தீபக்குமார், எஸ்ஐ சுப்பிரமணி தலைமையில் போலீசார் அங்கு சென்று மார்க்கை மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், இவன் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடைகளை உடைத்து பணம் கொள்ளை சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும், 2012-ல் வியாசர்பாடியில் ஒரேநாள் இரவில் 12 கடைகளை உடைத்து பணத்தை கொள்ளையடித்தவன் என்பதும், இவனை கைது செய்யாததால் குற்றப்பிரிவு ஆய்வாளர் இடமாற்றத்துக்கு ஆளானார் என்பதும் தெரியவந்தது.

 பலே திருடனான இவன் மீது சென்னை நகர காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடைசியாக, கோயம்பேட்டில் அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து 1.50 லட்சத்தை கொள்ளையடித்ததாக மார்க் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இன்று அதிகாலை போலீசார் மார்க்கை கைது செய்து, அவனிடம் இருந்து 90 ஆயிரம் ரொக்கப் பணம், கத்தி, இரும்பு பைப், ஸ்பேனர் உள்ளிட்ட கொள்ளைக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்தனர். போலீசார் மேலும், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Coimbatore ,shops , 12 stores, of CMBT, arrested
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு