×

நீட் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் உதவி

அருப்புக்கோட்டை: நீட் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. அருப்புக்கோட்டை சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பின் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

ஆரம்பம் முதலே நீட் தேர்வை திமுக எதிர்த்து வருவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். Ban Neet என்ற வாசகம் பொறித்த முகக்கவசம் அணிந்தவாறு அருப்புக்கோட்டையில் உதயநிதி பேட்டியளித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் 8 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்பதால் மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவின் தற்கொலைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், நீட் தேர்வை வன்மையாக கண்டித்தும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வு அச்சத்தால், நள்ளிரவு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுதுவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க ஸ்டாலின், “எல்லாரும் என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க, ஆனா எனக்குதான் பயமா இருக்கு” என்ற ஜோதிஸ்ரீயின் வரிகள் நீட் தேர்வின் கோர முகத்தை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நீட் தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா வரை காண முடிகிறது என்றும், தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல என்றும் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags : DMK ,Jyoti ,suicide , DMK, NEET, Financial Aid, Jothi
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை