×

மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரேவை கேலி செய்யும் படம்.: வாட்ஸ் ஆபில் பகிர்ந்த முன்னாள் கப்பல் படை அதிகாரிக்கு அடிஉதை

மும்பை: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரேவை கேலி செய்யும் கார்ட்டூன் படத்தை வாட்ஸ் ஆபில் பகிர்ந்த முன்னாள் கப்பல் படை அதிகாரியை சிவசேனா தொண்டர்கள் கடுமையாக தாக்கினர். மதன் சர்மா என்ற அந்த அதிகாரி தனது வாட்ஸ் ஆப் குழுவில் கார்ட்டூன் படத்தை பகிர்ந்துள்ளார். இந்த தகவல் கிடைத்த சிவசேனா தொண்டர்கள் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த மதன் சர்மாவை வெளியே இழுத்து சென்று கடுமையாக தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த தாக்குதலில் மதன் சர்மாவின் கண்களில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மதன் சர்மாவின் மகள் ஷிலா சர்மா குடுத்த புகாரின் பெயரில் மும்பை போலீசார் 6 பேரை கைது செய்தனர். தாக்குதலை கண்டித்துள்ள முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மராட்டியத்தில் குண்டர்கள் ஆட்சி நடைபெறுவதாக விமர்ச்சித்துள்ளார்.  Tags : Uttam Thackeray ,Maratha , Image mocking Maratha Chief Minister Uttam Thackeray: Former Navy officer kicked for sharing on Watts Apple
× RELATED மராட்டிய மாநிலத்துக்குள் சிபிஐ...