×

பழநியில் அடுத்தடுத்த 10 கடைகளில் திருட்டு: வைரலாகும் காட்சியால் பரபரப்பு

பழநி: கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சாலையில் உள்ள அடுத்தடுத்த சுமார் 10 கடைகளின் முன்புற இரும்பு நடைமேடைகளை மர்ம  ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. அதில் சில வாலிபர்கள்  கடையின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில்களை எடுத்து மினிஆட்டோவில் ஏற்றிச் செல்வது பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது  வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

னவே, போலீசார் சம்பந்தப்பட்ட திருட்டு நபர்களை பிடிக்க வேண்டும். இரவு நேரங்களில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வியாபாரிகள்  மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் பல  இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது பழநி நகரில் நடந்து வரும் சாலை சீரமைப்புப்பணியில் பல இடங்களில் இதன்  வயர்கள் துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் பல இடங்களில் காமிராக்கள் செயல்படவில்லையென கூறப்படுகிறது. எனவே, உடனடியாக  செயல்படாமல் உள்ள சிசிடிவி காமிராக்களையும் சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Theft ,shops ,Palani , Next in Palani Theft in 10 stores: Stirred by viral scene
× RELATED அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு