×

அரூர்- ஊத்தங்கரை சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : பொதுமக்கள் அவதி

அரூர்:  பள்ளிப்பட்டியிலிருந்து ஊத்தங்கரை வரை, நான்கு வழி சாலை பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அரூர் -ஊத்தங்கரை  சாலையிலுள்ள செக்கம்பட்டி தனியார் பள்ளி அருகில், சாலை பணிக்காக பள்ளம் தோண்டும்போது ஓகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் சேதமடைந்தது.  

இதனால், செக்கம்பட்டி மற்றும் மோபிரிப்பட்டி, ஈச்சம்பாடி, மாம்பட்டி, தாமலேரிப்பட்டி, கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி புதூர், வேட்ரப்பட்டி  உள்ளிட்ட பகுதியில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. மேலும், குழாய் உடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை  விரைந்து சரி செய்து சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : suffering ,Arur-Uthangarai ,road , Drinking water wasted due to broken pipe on Aroor-Uthangarai road : Public suffering
× RELATED பொள்ளாச்சி அருகே கூட்டுக்குடிநீர்...