×

இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45,62,414ல் இருந்து 46,59,984ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271லிருந்து 77,472ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1201 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35.42 லட்சத்திலிருந்து 36.24 லட்சமானது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.66% குணமடைந்தோர் விகிதம் 77.77%ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9,58,316 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இரண்டாவது நாடாக இந்தியா பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் கிட்டத்தட்ட 64 லட்சம் தொற்றுகளாக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,India ,Federal Ministry of Health , Corona, India
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...