×

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டம்: இந்தியா - சீனா முடிவு

புதுடெல்லி: இந்தியா-சீனாஇடையே எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க 5 அம்சத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகப் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து  வருகின்றன. உலக நாடுகளிடையே கவலையை உருவாக்கியுள்ள இந்த பிரச்னைக்கு ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீனா பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங்கியும் சில தினங்களுக்கு முன் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மாஸ்கோ சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன  வெளியுறவு அமைச்சர் வாங் யியும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை  தணிக்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பும் ஏற்றுக் கொண்ட கூட்டறிக்கையை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள 5 அம்சங்கள் வருமாறு:

1  இந்திய - சீன உறவை பலப்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களை மதித்து, இரு நாட்டு வீரர்களும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றி, பதற்றம் ஏற்படாத வகையில் ரோந்து செல்ல வேண்டும்.

2எல்லையில் பதற்றம் நிலவுவதை இருநாடுகளும் விரும்பவில்லை. எனவே, இருநாடுகளும் தங்கள் படைகளை வாபஸ் பெற்று, எல்லையில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்.

3எல்லை தொடர்பாக இரு நாடுகளும் பல கொள்கைகளை வகுத்து வைத்துள்ளன. அந்த ஒப்பந்தங்கள் மதிக்கப்பட வேண்டும்.

4எல்லையில் ஏற்படும் பிரச்னைகள், இருநாட்டு உறவை பாதித்து விடக் கூடாது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும்.

5எல்லையில் நிலைமை சீரான பிறகு, புதிய நம்பிக்கையை கட்டமைக்கும் வகையில், அமைதி, சமாதானம் நிலவும் முயற்சிகளை இருதரப்பும் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : border ,Ladakh ,China ,India , On the border with Ladakh To alleviate tension 5-point plan: India - China decision
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது