×

பாதுகாப்புதுறை தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் மத்திய அரசின் முடிவை கண்டித்து,  காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி பாதுகாப்பு துறை ஊழியர்களின் 3 மத்திய தொழிற்சங்க  சம்மேளனங்களும் தமிழகத்தில் தொமுச அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் இந்த  முடிவை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அரசு தன்னுடைய முடிவை திரும்ப பெறவேன்டுமென்று வலியுறுத்தி இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் 80,000 ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்.

Tags : Defense factory workers strike , Defense factory workers strike
× RELATED திருவேற்காடு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாப சாவு