×

வேட்பாளர்கள் குற்றப் பின்னணி பற்றி தேர்தலுக்கு முன்பாக 4 முறை விளம்பரம் கொடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘தனது வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை, அவர் சார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக 4 முறை விளம்பரப்படுத்த வேண்டும்,’ என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அரசு, நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்எல்ஏ, எம்பி தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். அமைச்சராகவும் கூட பதவி வகிக்க முடியும். இப்படிப்பட்டவர்களை நிரந்தரமாக தேர்தலில் நிற்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை. இருப்பினும், கிரிமினல் குற்ற வழக்கில் உள்ள வேட்பாளர் குறித்த முழு விவரங்களையும், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த கட்சி தரப்பில் பத்திரிக்கை, டிவி உள்ளிட்ட ஊடகங்களில்  விளம்பரம் வெளியிட வேண்டும்,’ என உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு மத்திய அரசு மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் கடந்தாண்டு தீவிர ஆலோசனை நடத்தியது. இதன் அடிப்படையில் நேற்று அது அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. ்அதன் விவரம் வருமாறு:— தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த அனைத்து விவரங்களையும், தேர்தலுக்கு முன்பாக பத்திரிகைகள், டிவி.க்கள் போன்ற ஊடகங்களில் 4 முறை, அவர்கள் சம்பந்தப்பட்ட கட்சிகள் விளபரம் கொடுக்க வேண்டும். —  வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான முதல் 4 நாட்களுக்கு முன்னதாக முதல் விளம்பரத்தை ்கொடுக்க வேண்டும்.— அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 3 முறை விளம்பரம் கொடுக்க வேண்டும்.— குறைந்தப்பட்சம் மூன்று முறையாவது இந்த விளம்பரம் கொடுக்கப்பட வேண்டும்.—மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும்.Tags : election , Candidates about criminal background Must advertise 4 times before the election: Election Commission Action Order
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு