×

ராசியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன: முதல்வர் பழனிசாமி

காஞ்சிபுரம்: தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்காக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரத்தில் பேசி வருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கண்டறிய செங்கல்புட்டு, காஞ்சிபரத்தில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார். ரூ.1,800 கோடிக்கு மேல் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் பேசிய முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் கூறியதாவது: ராசியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. பாலாற்றின் குறுக்கே மேலும் 2 தடுப்பணைகள் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேவையான அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளன. ஊரடங்கு காலத்தில் வேளாண்பணிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நோய்ப்பரவல் குறைந்த பிறகே மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து.அறிஞர் அண்ணா பட்டு பூங்கா பணிகள் 25% நிறைவடைந்துள்ளது
எல்லா மாவட்டங்களிலும் வீடு கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் வீடு கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பணிகள் நடக்கிறது. ஏரிகள் குடிமராமத்து பணிகளின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பாலாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. அரசு கட்டடங்கள், மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலாற்றின் குறுக்கே மேலும் 2 தடுப்பணைகள் கட்டும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. ரூ.60 கோடியில் குழவாய் ஏரியை சீரமைக்கும் திட்டம உள்ளது.  காஞ்சிபுரத்தில் ரூ.260 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசிக்கு வருகிறது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4518 பெண்களுக்கு இருசக்கரம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

முன்னதாக அவர் பேசியது:
தமிழகத்தில் கொரோனா தினசரி சராசரி பாதிப்பு 7,500-லிருந்து 5,500ஆக குறைந்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததால் இறப்பு எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளோம் என்று காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாதிப்பை படிப்படியாக குறைத்துள்ளோம் என்று முதல்வர் பேசியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 88% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று முதல்வர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.120.23 கோடி மதிப்பில் 43 திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசி வருகிறார். கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் ரூ.742.52 கோடியில் வளர்ச்சிப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ரூ.291  கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.  ரூ.120.23 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் முதல்வர் கூறியதாவது: மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதே அரசின் நடவடிக்கைக்கு சான்று என்று அவர் கூறியுள்ளார். அண்டை மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகமாக உள்ளது.  நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்துள்ளனர்.  மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Tags : Palanisamy ,Kanchipuram district , Civil works started in Kanchipuram district: Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...