×

நீதித்துறை மீதான விமர்சனம் ஏற்க முடியாது: மத்திய சட்ட அமைச்சர் ஆவேசம்

புதுடெல்லி: நீதிபதிகளுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே குறித்தும், உச்சநீதிமன்ற செயல்பாடுகள் குறித்தும் டுவிட்டரில் பதிவிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், நீதித்துறை மீதான விமர்சனங்கள் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பொதுநல வழக்குகளை பதிவு செய்தல், பின்னர் எந்த வகையான தீர்ப்பை அளிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் தொடர் பிரசாரத்தை முன்னெடுப்பது, இறுதித் தீர்ப்பு அவர்கள் விரும்பிய வகையில் இல்லையென்றால் மீண்டும் வெறுப்பு பிரசாரத்தை தொடங்கவேண்டியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அவர்களுடைய வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்படும் அரசியல் குற்றச்சாட்டுகள், சமீப காலங்களில் சுதந்திரமான நீதித்துறையின் மீது விழுந்த கறைகளாக உள்ளன. இதுபோன்ற மனப்போக்கு சமீப காலங்களில் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய சவாலாக வளர்ந்து வருகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான பொது அவசரம் குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.


Tags : judiciary ,Union Law Minister , Criticism of the judiciary is unacceptable: the Union Law Minister is outraged
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை...