×

சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் உடலில் 12 காயங்கள்

சென்னை: சென்னையில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கரின் உடலில் 12 காயங்கள் உள்ளன. ரவுடி சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலீஸ் திட்டமிட்டு சங்கரை தாக்கி கொலை செய்துவிட்டு என்கவுன்டரை நாடகமாடுவதாக அவரது தாய் புகார் கூறியுள்ளார். ரவுடி சங்கரின் தாய் புகாரை அடுத்து என்கவுன்டர் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணை முடிவில் புகார் உண்மையானால் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதியப்படும். ரவுடி என்கவுன்டர் தொடர்பாக 13 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளது.

Tags : Rowdy Shankar ,Chennai , Rowdy, Shankar, Encounter
× RELATED வாலிபர் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்