×

இந்து அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

சென்னை:  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து சமய நிறுவனங்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925ம் ஆண்டிற்கு முன்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் பின்னர், 1925ம் ஆண்டில் இந்து சமய அறநிலைய வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்து திருக்கோவில்கள், அறநிறுவனங்கள் மற்றும் திருமடங்கள் ஆகியவை வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து 1960ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் நிர்வாகத்தினை விரிவுபடுத்தி ஆணையர் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அதிகார வரம்புகளை வரையறுத்து திருக்கோயில்கள் மற்றும் அறநிறுவனங்களை கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதாவது அந்த மனுவில் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மனுவானது தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் இஸ்லாம், கிருத்துவம், சீக்கிய மதம், புத்தமதத்தை விட பழமை வாய்ந்தது இந்து மதம் என குறிப்பிட்டார். ஆனால் மதசார்பற்ற நாட்டில், இந்து மதத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் சட்டம் உள்ளதாக அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மசூதிகளை கட்டுப்படுத்த வக்ஃபு போர்டு சட்டம் அமலில் இருப்பதை சுட்டிக்காட்டினார். இதனனிடையே குருத்துவாராக்களை நிர்வகிக்க 1925ம் ஆண்டில் சீக்கிய குருத்துவாரா சட்டம் இயற்றப்பட்டதாக அவர் கூறினார். எனவே இந்து மதம் மீது பாரபட்சம் ஏதும் காண்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் அறிவித்ததையடுத்து மனுதாரர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டார்.

Tags : Chennai High Court , Chennai High Court, dismisses, case , Hindu Charities Act !!!
× RELATED வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம்!:...