×

காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசிக்கான அனுமதியை 3 ஆண்டு நீட்டிக்க பரிந்துரை

சென்னை: காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசிக்கான அனுமதியை 3 ஆண்டு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 24 எண்ணெய் கிணறுகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி அனுமதியை நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீடு குழு பரிந்துரை செய்துள்ளது. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்பட 24 இடத்தில் எண்ணெய் கிணறு தோண்ட 2013ல் அனுமதி தரப்பட்டது. 16 எண்ணெய் கிணறுகளை அமைத்துவிட்ட ஓஎன்ஜிசி எஞ்சிய பணிகளை முடிக்க மேலும் அவகாசம் கேட்டது. ஓ.என்.ஜி.சி அமைக்கவுள்ள 104 கிணறுகளில் 87 கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெயும், 17 கிணறுகளில் இருந்து இயற்கை எரிவாயுவும்  தோண்டி எடுக்கப்படவுள்ளது. காவிரி டெல்டாவில் மேலும் 104 எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் அனைத்து காவிரி பாசன மாவட்டங்களிலும் விவசாயமும், நீர் ஆதாரங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என சமூக ஆர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 200-க்கும் கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என பலர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


Tags : ONGC ,Cauvery Delta , Recommendation ,extend ONGC's permit,drilling oil wells,Cauvery Delta, 3 years
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...