×

பன்னாட்டு வன உயிர் நிதியத்தினர் குன்னூரில் நேரில் கள ஆய்வு

குன்னூர் : யானைகளின் வாழ்வாதாரம் குறித்து பன்னாட்டு வன உயிர் நிதியத்தை சேர்ந்தவர்கள் குன்னூரில் நேரி் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த சோலைமரக் காடுகளை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, கரடி,சிறுத்தை,காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.அது மட்டுமின்றி பல்வேறு வகையான பறவைகளும் வாழ்கின்றன. நீலகிரியில் உள்ள காடுகளை பாரம்பரியமாக கொண்ட பல்வேறு பறவையினங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும்.

நீலகிரி மாவட்டத்தில்  உள்ள யானைகளின் வழித்தடம், வாழ்வாதாரம், உணவு பழக்கம் உள்ளிட்டவற்றை பன்னாட்டு வன உயிர் நிதியத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குன்னூர் முதல் கல்லாறு வரையிலான வனப்பகுதியில் 12 யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவை சென்று வரக்கூடிய வழித்தடம், அவற்றிற்கு கிடைக்கும் உணவு  குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியை கோவை மண்டல கூடுதல் முதன்மை  வன உயிர் பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா மேற்பார்வையில் குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் பன்னாட்டு வன உயிர் நிதியத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Coonoor ,International Wildlife Fund ,
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது