×

திருப்பூர் ஆண்டிபாளையம் குளம் மழையால் நிரம்பி வழிகிறது

திருப்பூர் : திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஆண்டிபாளையம் குளம் நிரம்பி வழிகிறது. திருப்பூர் குளத்துப்புதூரில், 60 ஏக்கர் நிலபரப்பில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன், நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தடுப்பணையில் இருந்து செல்லும் வாய்க்கால் சேதமடைந்து, தண்ணீர் செல்லும் பாதையில் தடை ஏற்பட்டதால், குளம் வற்றியது. இதனால், பல ஆண்டுகளாக, தண்ணீரின்றி குளம், வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒன்றிணைந்த சேவையால், கடந்த பல ஆண்டுகளாக, வற்றாத நீர்நிலையாக இக்குளம் மாறியுள்ளது.

வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, தண்ணீர் வர இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதால், கடந்த, ஆறு ஆண்டுகளாக, பெய்து வரும் மழையால், நீர் வரத்து அதிகரித்து குளம் நிரம்பி வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும், பருவமழையில் குளம் நிரம்பி வருகிறது. பருவமழை ஆரம்பிக்கும் முன்னதாக, நீர் வரும் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் அகற்றப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், தற்போது திருப்பூர் சுற்று வட்டாரங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால், சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விளைநிலங்கள் செழிப்படைந்து வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் குறைந்துள்ளது.

Tags : Tirupur Antipalayam ,pond , Tirupur,Antipalayam pond, Rain, Pond Fulled
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...