×

கோரையாற்று கரையில் மண்சரிவால் விபத்து அபாயம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகில் ஒரத்தூரிலிருந்து- மூணாறு தலைப்பு செல்லும் கோரையாற்று கரையில் எற்பட்டுள்ள மண் சரிவை விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஒரத்தூர் கிராமத்திலிருந்து மூணாறு தலைப்புவரை கோரையாறு கரை சாலை செல்கிறது.இந்த சாலையே மிகவும் மோசமாக உள்ளது. அங்கு மிளகாய், கத்தரி, மரவள்ளி கிழங்கு, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான சாகுபடி நிலங்களுக்கு இந்த சாலையில்தான் செல்ல வேண்டும். அப்பகுதியில் வசிப்பவர்கள் இந்த சாலையில்தான் வந்து நீடாமங்கலம் நகருக்கு வரவேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் ஆற்றங்கரையில் உள்ள மண் 15 அடி நீளம் வரை சரிந்து கோரையாற்றில் மண் கரைந்துள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடம் மூணாறு தலைப்பிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தல் மோதி செல்கிறது.மழைக்காலம் தொடங்கி கூடுதல் மழை பெய்து கோரையாற்றில் அதிக தண்ணீர் திறந்தால் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ள இடத்தில் உடைப்பு ஏற்படும். அவ்வாறு உடைப்பு ஏற்ப்பட்டால் ஒரத்தூர் கீழத்தெரு, மேலத்தெரு, திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விபத்து ஏற்படும் முன் மணல் மூட்டைகளை அடுக்கி விபத்து ஏற்படாமல் தடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : landslide accident ,banks , needamangalam, koriyaru, Landslide, accident
× RELATED குமரி திருவட்டார் அருகே சாலையோரம் மண்...