×

தமிழகம் - கேரளா இடையே இன்று 2ம் கட்ட நதிநீர் பேச்சு

சென்னை: தமிழகம் - கேரளா இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கேரள குழுவுடன் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்ட ஒப்பந்தம் மறுஆய்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தி பவானி அணைக்கு தண்ணீர் திருப்புவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Tags : Phase ,river talks ,Tamil Nadu ,Kerala , Tamil Nadu, Kerala, river water
× RELATED பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு